சர்வதேச அளவில் வீழ்ச்சியடைந்த அமெரிக்க டாலர்… முன்னேறி வரும் இந்திய நாணயத்தின் மதிப்பு..!!

புதுடெல்லி: சர்வதேச அளவில் இந்தியாவுடனான வர்த்தகத்தில் ரஷ்யாவுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது.

இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதியில் ஒரு செங்குத்தான அதிகரிப்பு உள்ளது. இந்த ஆண்டு வழக்கத்தை விட பத்து மடங்கு இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ரஷ்யா அதிகரித்துள்ளது. ரஷ்ய கச்சா எண்ணெய் இப்போது இந்தியாவின் இறக்குமதி எண்ணெய் நுகர்வில் கிட்டத்தட்ட பத்து சதவீதத்தை பூர்த்தி செய்கிறது என்பது இரு நாடுகளின் வர்த்தக ரீதியிலான உறவுக்கு குறிப்பிடத்தக்க உதாரணம் ஆகும். இந்த நிலையில், ரஷ்யாவுடனான வர்த்தக தீர்வை இந்தியா விரைவில் ரூபாயில் தொடங்கும் முயற்சிக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒத்துழைப்பு அளித்துள்ளது.

வர்த்தக செயல்முறையை எளிதாக்க ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்புக்கொண்டதால், ரஷ்யாவுடனான வர்த்தகத்தை இந்தியா விரைவில் தொடங்கும் என்று இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (எஃப்ஐஇஓ) தலைவர் சக்திவேல் புதன்கிழமை (செப்டம்பர் 14) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.