பட்டப்பகலில் வீடு புகுந்து பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் பறிப்பு – மர்ம ஆசாமிகள் கைவரிசை..!

கோவை சிங்காநல்லூர் திருக்குமரன் நகர் , 3-வது வீதியைச் சேர்ந்தவர் வீரமணி ,இவரது மனைவி செல்வி (வயது 50 )இவர் அடுக்குமாடி குடிப்பில் 3-வது மாடியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இவரது வீட்டின் முன் 2 ஆசாமிகள் நின்றனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தண்ணீர் டாங்க் பழுது பார்க்க வந்துள்ளோம் என்று கூறியுள்ளனர். அவர் உடனே கதவை மூடுவதற்கு முயற்சித்தார். அந்த நேரத்தில் அந்த ஆசாமிகள் அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி சென்றுவிட்டனர் .இது குறித்து செல்வி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தண்டபாணி வழக்கு பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்.