நடந்து சென்றவர்கள் மீது கார் மோதி 5 பேர் படுகாயம் – பெண் மீது வழக்குபதிவு ..!

கோவை அருகே உள்ள செட்டிபாளையம், சத்திரம் வீதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனா சிந்து ( வயது 30 ) இவர் நேற்று செட்டிபாளையம்- பல்லடம் ரோட்டில் “எலக்ட்ரிக்கல் கார்” ஓட்டிச் சென்றார். அங்குள்ள பழமுதிர் நிலையம் அருகே சென்ற போது திடீரென்று நிலைதடுமாறி  ரோட்டில் நடந்து சென்றவர்கள் மீது கார் மோதியது..இதில் விழுப்புரம் வேலவன் (வயது 23 )மலுமிச்சம்பட்டி சுதா (வயது 40) பாலக்காடு சஞ்சய் கிருஷ்ணா (வயது 19 )பொள்ளாச்சி சம்பத்குமார் (வயது 37) தேகாணிதாசையன் (வயது 20 )ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் கார் ஓட்டி வந்த மீனா சிந்து மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.