தனியார் கார் விற்பனை ஷோரூமில் காசோலைகள் திருடி ரூ.42 லட்சம் மோசடி- முன்னாள் ஊழியர்கள் 4 பேர் கைது..!

தனியார் நிறுவனத்தில் காசோலைகள் திருடி ரூ. 42 லட்சம் மோசடி முன்னாள் ஊழியர்கள் 4 பேர் கைது.

கோவை: கோவை திருச்சி ரோட்டில் தனியார் கார் விற்பனை ஷோரூம் உள்ளது .இங்கு திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடசுப்பிரமணி ( வயது 48 )என்பவர் கணக்குப் பிரிவு ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவர் திடீரென்று வேலையில் இருந்து நின்று விட்டார் .ல் அந்த நிறுவனத்தில் கணக்குகளை தணிக்கை செய்தபோது வெங்கடசுப்பிரமணியம் அந்த அலுவலகத்தில் இருந்து காசோலைகளை திருடி நிறுவனத்தின் கணக்கிலிருந்து ரூ.42 லட்சத்தை எடுத்து கூட்டாளிகளின் கணக்கிற்கு அனுப்பி மோசடி செய்தது தெரியவந்தது .இது குறித்த புகாரின் பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இந்த மோசடியில் தொடர்புடைய வெங்கடசுப்பிரமணியன், நண்பர்கள் கார்த்திக்,சிவா, தினேஷ் பாபு ஆகியோரை கைது செய்தனர். வெங்கடசுப்பிரமணி தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர் .மோசடி செய்த பணம் அவரிடம் இருந்து முழுமையாக கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.