கோவை: உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த தொழில் அதிபரின் 14 வயது மகள் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் படித்து வருகிறார் .அந்த சிறுமி சில நாட்களுக்கு முன்பு திடீரென்று மாயமானார் .இதுகுறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரில் தனது மகளை கடத்தியது தொடர்பாக ஒரு சிறுவன் மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார் ..அதன் பேரில் போலீசார் சிறுவன் சிறுமி ஆகியோரின் செல்போன்களை ஆய்வு செய்ததில் அவர்கள் இருவரும் கோவையில் இருப்பதாக காட்டியது உடனே சிறுமியின் தந்தை தனது மகளின் புகைப்படத்துடன் தமிழக காவல்துறை உதவ வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் .இதை அறிந்த தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில்கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் 3 தனிப்படைகள் அமைத்தார். அவர்கள் ரெயில்நிலையங்கள்,பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறுமி மற்றும் அவரை கடத்திய சிறுவனை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடமாநில தொழல் அதிபர் மகள் கோவைக்கு கடத்தல்-தீவிர தேடுதல் பணியில் போலீசார்..!
