கோவை லாட்ஜில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் போலீசாக நடித்து நகை, பணம் கொள்ளையடித்த 4 பேர் கைது – 6 பேருக்கு போலீஸ் வலைவீச்சு.!

கோவை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை சேர்ந்தவர் சஞ்சீவி (வயது 42) இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் தங்கி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 8-ந்தேதி நிலம் வாங்குவதற்காக கிருஷ்ணகிரி சென்று ஓட்டலில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று அவர் ஓட்டல் அறையில் இருந்த போது 7 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது .அவர்கள் தங்களை கேரளம் மற்றும் அதனை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் என்று அறிமுகம் செய்து கொண்டனர் . அவர்கள் சஞ்சீவுடன் நீங்கள் இரிடியத்தை பொதுமக்களை ஏமாற்றி விற்பதாக புகார் வந்துள்ளது. எனவே விசாரிக்க வேண்டும் எனக் கூறி சஞ்சீவியை மிரட்டி அவரை காரில் கரூர் நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர் .பின்னர் அவரை கோவை காந்திபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து அடைத்து வைத்தனர்.அப்போது கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிபின் என்பவர் தன்னை கேரள போலீஸ் என்று கூறி வந்துள்ளார். அவருடன் கிப்சன் சமீர் முகமது ஆகியோர் வந்தனர். அவர்கள் 10 பேரும் சேர்ந்து சஞ்சீவியிடம் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர் அதற்கு அவர் தன்னிடம் தற்போது பணம் இல்லை என்று கூறினார். பின்னர் அந்த கும்பல் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தையும் மேலும் அவர் அணிந்திருந்த 16 பவுன் தங்கச் சங்கிலி,10 பவுன் கைச்செயின், 4 பவுன் மோதிரம் உள்ளிட்ட 30 பவுன் தங்க நகைகளை மிரட்டி பறித்தனர். பின்னர் அந்த கும்பல் சஞ்சீவியை காரில் ஏற்றி சேலம் பைபாஸ் ரோடு டோல்கேட் அருகில் இறக்கிவிட்டு விட்டு ரூ.30 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று கூறி தப்பிச் சென்று விட்டார்கள் .இதுகுறித்து காட்டூர் போலீசில் சஞ்சீவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த சிபின் கிட்சன் சமீர் முகமது மற்றும் தஞ்சை மாவட்டம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த குமார் என்ற மீன்சுருட்டி குமார் ( வயது 42 )ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 16 பவுன் தங்க நகைகளை போலீசார் மீட்டனர் இதில் சமீர் முகமது தனது பெயர் அலெக்ஸ் என்று கூறி ஏமாற்றியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது . இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.