பெட்டிக்கடையில் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ குட்கா பறிமுதல்- டிரைவர் கைது

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை ரோட்டில் உள்ள சுதந்திரபுரத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி ( வயது 50 ) டிரைவர்.இவர் அந்த பகுதியில் பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார் இவரது கடையில் மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 4. 120 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் (குட்கா ) பறிமுதல் செய்யப்பட்டது .இது தொடர்பாக பொன்னுசாமி கைது செய்யப்பட்டார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.