மருந்து கடையில் பூட்டை உடைத்து 17 பவுன் நகை,பணம் திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை..!

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள இடையர்பாளையம் சிவகாமி நகரை சேர்ந்தவர் ராமசாமி .இவரது மனைவி சிவகாமி (வயது 54) இவர் சாய்பாபா காலனி என்.எஸ். ஆர்.ரோட்டில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.நேற்று கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்ட ர்பூட்டு உடைக்கப்பட்டுகிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ டிராயரில் வைத்திருந்த 17 பவுன் தங்க நகைகள், பணம் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சிவகாமி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.