கோவையில் வாலிபரை மிரட்டி செல்போன் பறிப்பு – 2 இளைஞர்கள் கைது..!

கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சூர்யா ( வயது 27 )இவர் குனியமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் ரோட்டில் தனது நண்பர்களை பார்க்கச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். பின்னர் இவரை மிரட்டி இவரிடமிருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து சூர்யா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்த அபிஷேக் ( வயது 21 )சிறுவாணி டேங்க் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 19) ஆகியோரை கைது செய்தார் .இவரிடமிருந்து செல்போன் மீட்கப்பட்டது. இது தொடர்பாக சஞ்சீவ் என்பவரை தேடி வருகிறார்கள்.