சென்னையில் இடம் இருக்கிறது எனக்கூறி ரூ.10 லட்சத்திற்கு பேரம் பேசி விற்ற மோசடி நபர்கள் 4 பேர் கைது..!

சென்னையில் இடத்தை வாங்கி வீட்டை கட்டலாம் கட்டிய வீட்டை வாங்கலாம் என்று பார்த்தால் எங்கும் மோசடி எதிலும் மோசடி அனைத்திலும் மோசடி.. இது ஒரு உஷார் ரிப்போர்ட்.. பொதுமக்களே உஷாராக இருங்கள் பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்..

சென்னை அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் 8 வது தெருவை சேர்ந்தவர் துரைசாமி நாயுடுவின் மகன் ராகவன் 2008ம் ஆண்டு பத்மாவதி நகர் ஐயப்பன் தாங்கல் சென்னை என்ற இடத்தில் 1100 சதுர அடி இடத்தை வாங்குவதற்காக விமல் சந்த் என்பவரின் பொது அதிகார ஏஜென்ட் ஜேம்ஸ் பாஸ்கோ என்பவனிடம் ரூபாய் 10 லட்சம் கொடுத்துள்ளார். ஜேம்ஸ் பாஸ்கோ கொடுத்த பொது அதிகார ஆவணத்தை எடுத்துச் சென்று இடத்தின் உரிமையாளர் விமல் சந்த் என்பவரிடம் காட்டி விவரம் கேட்டபோது தனது சொத்துக்கு முகவராக யாரையும் நியமிக்கவில்லை என்று சொன்னதின் பேரில் இது குறித்து விசாரித்த போது ஜேம்ஸ் பாஸ்கோ போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் பணத்தை பெற்றுக் கொண்ட து தெரிய வந்தது. தீவிர விசாரணையில் போராராம் என்பவர் இடத்தின் உரிமையாளர் விமல் சந்த் போல் ஆள் மாறாட்டம் செய்து உள்ளதும் குற்றவாளிகள் சிவக்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் இருவரும் போலி பொது அதிகார பத்திரத்தில் சாட்சி கையெழுத்துயிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது . இதுகுறித்து ராகவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கடந்த 14 ஆண்டுகளாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது . இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜேம்ஸ் போஸ்கோ போரா ராம் சிவகுமார் ராமகிருஷ்ணன் ஆகிய 4 பேருக்கும் தலா மூன்று ஆண்டுகள் மற்றும் ஏழு மாத சிறை தண்டனையும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் டாக்டர் ஸ்டாலின்  உத்தரவிட்டார் சைதாப்பேட்டை சார் பதிவாளர் இளையபெருமாள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை தர நியாயமான முறையில் வாதிட்ட அரசு வழக்கறிஞர் சரத் பாபு மற்றும் மத்திய குற்றப்பிரிவு நில பிரச்சனை தீர்வு அணி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் அவரது குழுவினரை போலீஸ் கமிஷனர் சங்கர் பாராட்டு தெரிவித்தார்..