கனடாவில் வேலை வாங்கித் தருவதாக 23 நபரிடம் ரூ.1 கோடி வாங்கி மோசடி செய்த கேடி கைது..!

உலக நாடுகளில் பல்வேறு இடங்களில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது ஆட்கள் தேவை என பிரபல நாளிதழ்களில் டிசைன் டிசைனாக விளம்பரங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன . இதைப் பார்த்து தான் நமது தமிழக மக்கள் ஏமாந்த இளித்த வாயர் கள் அல்லவா லட்சக்கணக்கில் பணத்தைக் கொட்டிக் கொடுக்க நான் ரெடி ஏமாற நீங்கள் ரெடியா என்ற கேள்வி தான் இந்த செய்தியின் சாராம்சம் இந்தியாவின் தலைநகரான டெல்லி மற்றும் சென்னையில் பல்வேறு தூதரகங்கள் இருக்கின்றதே அங்கு சென்று உண்மையிலேயே நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த நாட்டில் வேலைவாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விகளை கேட்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். இந்த செய்தியை விரிவாக பார்ப்போம்.

சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோரை சந்தித்த நாராயணன் மகன் சண்முகம் வயது 47 ராமநாதபுரம் மாவட்டம் கமுதிக்குடி அடுத்த பரமக்குடி இளந்த குளம் பகுதியைச் சேர்ந்தவர் சென்னையில் உள்ள தனியார் ஏஜென்சி நடத்தி வரும் ஒரு பிராடு கனடா நாட்டில் வேலை வாங்கி தருவதாக தினசரி செய்தித்தாள்களில் கொடுத்த விளம்பரத்தை பார்த்து எனது ஆசை மகனுக்கு வேலை வாங்குவதற்காக தொடர்பு கொண்ட போது அவன் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வங்கி கணக்கு மூலமாகவும் ரொக்கமாகவும் மொத்தம் ரூபாய் 14 லட்சத்து 25 ஆயிரம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலையும் வாங்கி தராமல் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டு தலை மறைவாகி விட்டான் . இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அவர்களிடம் கொடுத்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது . கூடுதல் ஆணையர் செந்தில்குமாரி ஆலோசனையின் பேரில் துணை ஆணைய ஸ்டாலின் நேரடி மேற்பார்வையில் வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பி. தனலட்சுமி தலைமையிலான அதிரடி போலீஸ் குழுவினர் தீவிர புலன் விசாரணையில் கே. சிவராஜ் வயது 33. தகப்பனார் பெயர் கமலக்கண்ணன் காந்திநகர் மெயின் ரோடு ஈக்காட்டுத்தாங்கல் சென்னை என்பவனை அதிரடியாக கைது செய்தனர். இவன் ஏஜென்சி ஒன்றின் பெயரில் கனடா நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 2022ம் ஆண்டு முதல் இதுவரை 23 நபர்களிடம் ரூபாய் 1 கோடி பணத்தை வாங்கி மோசடி செய்து உண்மை என தெரிய வந்தது. தலை மறைவாக இருந்த கேடி சிவராஜ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். புழல் சிறையில் அடைக்கப்பட்டான்.