கோவை கணபதி, பி .என். டி. காலனியை சேர்ந்தவர் வீரராகவன் .இவரது மனைவி மீனா ( வயது 73) இவர் நேற்று மதியம் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி பறித்தான்.அப்போது மீனாராகவன் கீழே விழுந்தார்.இதில் இவருக்கு காயம் ஏற்பட்டது சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .அந்த ஆசாமி நகையுடன் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்.