வேலை செய்யும் அலுவலகம் முன்பு மனைவிக்கு கத்தி குத்து-கணவர் மீது வழக்குப்பதிவு..!

கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 49) இவரது மனைவி திவ்யா (வயது 35)இவர் பீளமேடு சித்ராவில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார்.இவரது 9 பவுன் நகையை அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மனைவிக்கு தெரியாமல் பைனான்சில் அடகு வைத்து விட்டார். இதை அவரது மனைவி திவ்யா அவரிடம் கேட்டார் .இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பின்னர் திவ்யா வேலைக்கு சென்று விட்டார். நேற்று மனைவியின் அலுவலகத்துக்குச் சென்ற பாலசுப்ரமணியம் அவரை செல்போனில் தொடர்பு கொண்டு வெளியே வருமாறு கூறினார் .அவர் வெளியே வந்ததும் அவரை கைகளால் தாக்கி, கத்தியால் குத்தினார். இதில் திவ்யா படுகாயம் அடைந்தார்.இவர் சிகிச்சைக்காக கோவை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து பீளமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் கணவர் பாலசுப்பிரமணியம் மீது கொலை முயற்சி,பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.