கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்ற 32 பேர் கைது : 17,285 கிலோ கஞ்சா பறிமுதல்- கோவை போலீசார் அதிரடி..!!

தமிழகம் முழுவதும் ஆப்ரேசன் 2.0 என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கஞ்சா, குட்கா மற்றும் போதை மாத்திரைகளை தடுக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் கஞ்சா விற்பனை செய்த 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கோவை மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் நடைபெற்ற தனிப்படை போலீசாரின் தீவிர சோதனையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 32 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 17, 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில், கோவை புறநகர் பகுதிகளில் தொடர் கண்காணிப்பின் மூலம் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவோர் தினமும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கடந்த 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை 3 நாட்களில் மட்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 32 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து, 17ஆயிரத்து 285 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 பேர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கையும், 27 பேர் மீது நன்னடத்தை பிணையமும், நீதிமன்ற காவலில் உள்ள 6 பேர் மீது பிணை முறிவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 2 பேர் மீது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கையும், 27 பேர் மீது நன்னடத்தை பிணையமும், நீதிமன்ற காவலில் உள்ள 6 பேர் மீது பிணை முறிவு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி, பத்ரிநாராயணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.