மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் கடன் வழங்குவதில் வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும்-கோவை கலெக்டர் அறிவுறுத்தல்..!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாவட்ட அளவிலான குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கி பேசுகையில் மாவட்டத்தில் சிறு மற்றும் குரு தொழிற்சாலைகள் அதிகமாக இருப்பதால் தொழில் வளர்ச்சிக்கு உகந்த மாவட்டமாக திகழ்வதாகவும் இங்கு உள்ள தொழிற்சாலைகளை மென்மேலும் வளர்ப்பதற்கும் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகளின் பங்கு மிகவும் அவசியமாக உள்ளதாக தெரிவித்தார்.

வங்கிகளின் மூலம் கடனுதவி வழங்குதல் தொழில் துறையினர் பயன்பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை வங்கிகள் தொழில் முனைவோர், மாவட்ட தொழில் மையம் ஆகியன இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கம் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் சுயதொழில் தொடங்குவதற்கான வங்கிக் கடன் எனவும் அரசால் வழங்கப்படுகின்றது செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்களை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டும் என கூறினார்.

மாவட்டத்தில் கல்வி கடன் ரூ.150 கோடி மதிப்பீட்டில் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என தெரிவித்த அவர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தாட்கோ மூலம் வழங்கப்படும். கடன் திட்டங்கள் உள்ளிட்ட கடன் திட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு விரைவாக கடன்களை வங்கிகள் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் மற்றும் சமூகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கு கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் கூறினார்.
இக்கூட்டத்தில் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே. செல்வராஜ், அமுல்கந்தசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கௌசல்யா தேவி, ரிசர்வ் வங்கியின் உதவிப் பொது மேலாளர் அமிர்த பாலசுப்ரமணியம், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் திருமலை ராவ், தாட்கோ மாவட்ட மேலாளர் செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.