போலி ஆவணம் தயாரித்து விற்ற குற்றவாளிகளுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை.!!

சென்னை அடை யார் இந்திரா நகர் முதல் அவென்யூவில் வசிப்பவர் ரேவதி ராஜாராம். இவருக்கு சொந்தமான நிலம் 1 ஏக்கர் 33 சென்ட் உள்ளது. இந்த நிலத்தை பிராடு வேலை செய்வதற்கென பட்டம் பெற்றவர்கள் போல உலக மகா கேடிகள் கருணையே இல்லாத கருணாகரன் தகப்பனார் பெயர் அந்தோணி பாலாஜி 2. கோதண்டபாணி ரவி சேட் தகப்பனார் பெயர் தாமு என்பவர் கூட்டாக சேர்ந்து கொண்டு போலியான அதிகாரம் பெற்றதாக சில பேருக்கு விற்றதாக அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்துள்ளான். கேடி கருணாகரன் ஆள் மாறாட்டம் செய்து டூப்ளிகேட் ஆவணங்கள் மூலம் கஸ்தூரி சீனிவாசன் என்பவருக்கு விற்றதாக போலி பத்திரங்களை ஆவணங்களை தயார் செய்துள்ளான். இது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன் பேரில் ஆவடி குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனர் குற்றப்பிரிவு பெருமாள் நேரடி மேற்பார்வையில் பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்ற நடுவர் ஸ்டாலின் உலக மகா குற்றவாளிகள்1. கருணாகரன் 2.பாலாஜி 3. ரவி ஷேட் ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அபராதமாக தலா ரூ 35 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு கூறினார் .இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சரத் பாபு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தண்டனை பெற்ற குற்றவாளிகள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்..