வரும் 11ம் தேதி திருச்சியில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு நடக்கிறது.!!

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு வரும் 11-ந் தேதி நடக்கிறது.
தமிழக அரசு பணியில் சேர வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. தற்போதைய நிலையில் லட்சக்கணக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்ர்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் பல அரசு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட வில்லை. மிக குறைந்த அளவிலேயே காலி பணியிங்கள் நிரப்பப்பட்டன. அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2, 2ஏ தேர்வுகளின் மூலம் 5,860 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதேபோல் குரூப் 4 பணியிடங்களை பொறுத்தவரை சுமார் 10000 பணியிடங்கள் நிரப்பியது தமிழக அரசு. இப்படி பல்வேறு அரசு தேர்வாணைய முகமைகள் மூலமாக இரண்டரை ஆண்டுகளில் மொத்தம் 60,567 பேர் அரசுப் பணிகளில் சேர்ந்துள்ளாக கூறப்படுகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள், மேலும் 10 ஆயிரம் பேர் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதனை உறுதி செய்யும் வகையில், குரூப் 4 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற போகிறது. இதன் மூலம் 108 விஏஓ பணியிடங்கள், 2,442 இளநிலை உதவியாளர் பணியிடங்கள், சுமார் 1,700 தட்டச்சர் பணியிடங்கள் மற்றும் வனக்காவலர் பணியிடங்கள் என மொத்தமாக 6,244 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ளது.
இதேபோல் வன காப்பாளர் தேர்வுக்கான (1,264 காலியிடங்கள்) அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிட்டு, ஜுன் மாதம் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதேபோல் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சியில் 1,933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு வரும் மார்ச் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடங்களை கணக்கிட்டால் 10000 என்கிற அளவில் வருகிறது. எனவே விரைவில் தமிழ்நாட்டில் 10000 பேர் தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில்இதில் அதிகபட்ச பணியிடங்கள் குரூப் 4 பணியிடங்கள் என்பதால் அதில் சேர அதிகம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். பல லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்நிலையில் குரூப் 4 தேர்வு எப்படி இருக்கும் என்பது குறித்து புரிதல் வேண்டும் என்று விரும்புவோருக்கு திருச்சி மாவட்ட மைய நூலகம் நல்ல செய்தியை கூறியுள்ளது.
இதுபற்றி திருச்சி மாவட்ட மைய நூலகம் முதல்நிலை நூலகர் தனலட்சுமி கூறுகையில், “திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4 (டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4) போட்டித் தேர்வுக்கான மாதிரி தேர்வு வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.
மாதிரி தேர்வில் 9-ம் வகுப்பு சமூகஅறிவியல், டிசம்பர் 2023-ம் மாத நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதம் ஆகிய பாட பகுதிகளில் இருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரி தேர்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாணவர்களுக்கு வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர்.விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தேர்வு நடைபெறும்.
மாதிரி தேர்வு முடிந்தவுடன் ஒவ்வொருவரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தெரிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும் வழிமுறைகளும் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயார் செய்யும் மாணவ-மாணவிகள் தேர்வில் கலந்து கொண்டு பயன் அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.