கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரி (வயது 30) தொழிலதிபர்.இவரது மனைவி கிருத்திகா ( வயது 27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி கிருத்திகா தனது குழந்தைகள் மற்றும் தனது மாமியார் கீதா லட்சுமி, மாமனார் துரைசாமி ஆகியோருடன் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றார். ஹரி சொந்த வேலைக்காரன்மாக வெளியூர் சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று அதிகாலை கிருத்திகாவிற்கு அவரது உறவினர் ரத்தினசாமி என்பவர் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கோவைக்கு புறப்பட்டு வந்தார். வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 27 பவுன் தங்க நகைகள், பணம் ரூ. 5 லட்சத்து 32 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
Leave a Reply