கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48) இவர் 2007 -ம் ஆண்டு பீளமேடு, ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் சேர்ந்த மகேஷ் (வயது 38) என்பவரின் தங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . இவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள் . இந்த நிலையில் மகேஷ் தனது தங்கையான கார்த்திகேயனின் மனைவியிடம் பண உதவி செய்யுமாறு போன் மூலம் கேட்டார் . இதை நம்பிய கார்த்திகேயனின் மனைவி மகேஷிடம் ௹ .83 லட்சத்து 6, ஆயிரத்து 500 கொடுத்தார். இதில் 9 லட்சத்து 21 ஆயிரத்து 680 ரூபாயை வங்கி மூலம் திருப்பி செலுத்தினார் . இந்த நிலையில் கார்த்திகேயனின் மனைவி மேலும் 70 பவுன் நகைகளை மகேஷிடம் கொடுத்தார். நகைகளையும் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் மகேஷ் அவரது குடும்பத்தினர் மோசடி செய்து விட்டனர் . மொத்தம் ரூ.2 கோடி வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது . இது குறித்து கார்த்திகேயன் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் இது தொடர்பாக விசாரணை நடத்தி லட்சுமிபுரம் மகேஷ் ( வயது 38) அவரது தாயார் சிந்தாமணி ( வயது65) தந்தை சின்னசாமி (வயது 67) சித்தப்பா விஸ்வநாதன் ( வயத65) ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்..
Leave a Reply