முன்விரோதத்தால் வாலிபர்கள் 2 பேருக்கு கத்தி குத்து-போலீஸ் வலை.!

கோவை ஆவாரம்பாளையம், தெற்கு வீதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் அஜித்குமார் ( வயது 22 )அதே பகுதியில் உள்ள இளங்கோ நகரை சேர்ந்தவர் மாடசாமி .இவரது மகன் கார்த்திக் ( வயது 21 ) இவர்கள் இருவரும் காந்திமாநகரில் உள்ள இன்ஜினியரிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்கள்.நேற்று முன்தினம் இருவரும் கணபதி வி.ஜி.ராவ்.நகரில் நடந்து சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோபால் என்பவர் முன் விரோதம் காரணமாக இவர்களிடம் தகராறு செய்தார். பின்னர் இருவரையும் கத்தியால் குத்தினார். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது .பின்னர் அவர் தப்பி ஓடிவிட்டார்.படுகாயம் அடைந்த அஜித் குமாரும் கார்த்திக்கும், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அஜித்குமார் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் கோபால் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.