பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பூசாரி சடலம் மீட்பு..

கோவை சரவணம்பட்டி, ஜனதா நகர் ,வேலவன் நகரைச் சேர்ந்தவர் பால தண்டபாணி ( வயது 55) கோவில் பூசாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் தங்கிருந்த வீட்டின் கதவு கடந்த 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. சந்தேகம் அடைந்த மாநகராட்சி 11வது வார்டு உறுப்பினர் சிவா என்ற பழனிச்சாமி இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து திறந்து பார்த்தார். அங்கு பாலதண்டபாணி அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் எப்படி செத்தார் ? என்று தெரியவில்லை. பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.