தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய திருப்பங்கள் பெரும் புயலை கிளப்பி வரும் நிலையில், திமுக மற்றும் அதன் முன்னாள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான வார்த்தை போர் வெடித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், “துரோகம் இழைத்த காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்” என்ற தலைப்பில் ஒரு வலுவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தொண்டர்களின் உழைப்பையும், கட்சியின் பலத்தையும் நம்பியே காங்கிரஸ் கட்சி இத்தனை காலம் தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளது என்று அந்த தீர்மானத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சொந்தமாக தொண்டர்களை திரட்ட கூட துப்பில்லாத காங்கிரஸ் கட்சிக்கு, திமுக தொண்டர்கள் தங்களின் வியர்வையையும் ரத்தத்தையும் சிந்தி தேர்தல் வேலைகளை செய்தனர் என்று அக்கட்சி சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை திமுக கூட்டணியில் எந்த சந்தர்ப்பத்திலும் சேர்க்கக்கூடாது . காங்கிரஸ் தொடர்ந்து திமுகவுக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு.காங்கிரஸ் இருந்தால் திமுகவுக்கு நஷ்டம் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் .திராவிட மாடல் அரசியலை பாதுகாக்க காங்கிரஸ் இல்லாத கூட்டணி தேவை






