பூட்டிய வீடுகளில் கொள்ளை நடத்திய 2 பலே கில்லாடி பெண்கள் கைது..!

கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை மேற்கு வீதி சேர்ந்தவர் சதாசிவம் ( வயது 60) ஆவின் பால் டீலராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ரகசிய இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார் .அப்போது அங்கு வந்த மர்ம பெண் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்தார். பின்னர் வீட்டிலிருந்து 15 பவுன் நகை மற்றும் ரூ5 ஆயிரத்தை திருடிவிட்டு மீண்டும் வீட்டின் சாவியை அதே இடத்தில் வைத்துவிட்டு சென்றுவிட்டார் .இது குறித்த புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தப்பி சென்ற பெண்ணை சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர் .இதில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை நடத்தியதில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் வெங்கமேட்டை சேர்ந்த ரமணி (வயது 33) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரமணியை கைது செய்தனர்.மேலும் அவருக்கு உதவியதாக கோவை கணபதியை சேர்ந்த வினையா ( வயது 36 )என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 15 பவுன் நகைகள் மீட்கப்பட்டது .போலீஸ் விசாரணையில் ரமணி திருட்டு வழக்கில் கோவை மத்திய பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அங்கு போக்சோ வழக்கில் கைதாகி ஏற்கனவே சிறையில் இருந்த வினையா என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது .இதையடுத்து அவர்கள் இருவரும் சிறையில் இருந்தபோது பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருட முயற்சி செய்தனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியே வந்ததும் வாடகைக்கு வீடு தேடுவது போல ஒவ்வொரு வீதியாக சென்று பூட்டி கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு நகை பணம் திருடியது தெரியவந்தது ச.ம்பவத்தன்று ஆவின்பால் டீலர் சதாசிவம் வீட்டிற்கு இருவரும் கால் டாக்சியில் வந்துள்ளனர் ..பின்னர் காரில் வினையா அமர்ந்து கொண்டார் .ரமணி மட்டும் காரரை விட்டு இறங்கிச் சென்ற சதாசிவம் வீட்டில் நகை- பணத்தை திருடி மீண்டும் காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளார். இது தவிர ரமணி கோவை நாமக்கல் திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பலவீடுகளில் இது போன்று கைவரிசை காட்டி நகை- பணம் திருடியது தெரியவந்தது .மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் ரமணி மீது 15க்கு மேற்பட்ட திருட்டு வழக்கு உள்ளது.