கோவை பொன்னையராஜபுரம்,சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கவுரி ஆண்டவர் லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ரமேஷ் (வயது 43)இவர் கே.ஜி. வீதியில் தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரிடம் 25 -6′ – 20 22 அன்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் போலோ என்பவர் நகை செய்து கொடுப்பதாக 172 கிராம் தங்கம் வாங்கி இருந்தார் .நகை செய்து கொடுக்காமல் எங்கோ தலைமறைவு ஆகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நகை பட்டறை அதிபர் ஆனந்தகுமார் வெரைட்டி ஹால்ரோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப்போலவை தேடி வருகிறார்கள். இவர் மீது மோசடி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply