கோவை பீளமேடு லால் பகதூர் காலனியில் உள்ள வணிக வளாகத்தின் முதல் மாடியில் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் ஸ்ரீ சிவா ( வயது 25 ) நேற்று இவரது கடையில் தீடீரென்று தீ பிடித்தது.இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த கார்த்திகேயன் (வயது 21) படுகாயம் அடைந்தார்.இவர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கடையில் இருந்த 17 பேட்டரி சார்ஜர்கள், லேப்-டாப், கம்யூட்டர் உள்பட ஏராளமான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும்.இதுகுறித்து கடை உரிமையாளர் ஸ்ரீ சிவா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.