கோயமுத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

கோயமுத்தூர் மாப்பிள்ளையின் குமுறல்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சமீப காலமாக பெண் கிடைப்பதில் மிகுந்த சிக்கலை எதிர்கொண்டுள்ள மாப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தார் அவதி அடைந்து வரும் நிலையில் திருமணம் நடைபெறுவதில் அதிக அளவில் சிக்கல்களை சந்திக்கின்றனர்.

*ஆயிரம் பொய்யை கூறி திருமணம் *செய்* என்று பழமொழியை கடைப் பிடித்து பெண்கள் பார்த்தாலும் மாப்பிள்ளைகளுக்கு பெண் கிடைப்பதில் அதிக சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் தனியார் மண்டபத்தில் ஒரு சமூகத்தினர் சுயம்வரம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். அதில் கலந்து கொள்வதற்காக வந்த மாப்பிள்ளை ஒருவரின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தான் காலை எழுந்து மழையில் நனைந்தபடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த போது அங்கு அதிக கூட்டம் இருப்பதாகவும் அவர் கொண்டு வந்த ஜாதகம் உள்ளே சென்றடையுமா ? என்று கூறிய அவர்கள் மாப்பிள்ளைக்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் உள்ளதா ? சொத்து உள்ளதா ? என கேள்வி கேட்டும் இவர்களிடத்தில் நாமக்கு பெண் கிடைக்குமா ? அங்கு உள்ளவர்களில் மாப்பிள்ளை வீட்டார் மட்டும் அதிக அளவில் உள்ளதாகவும், பெண் வீட்டார் சரியாக யாரும் வரவில்லை என்றும் புலம்பும் அவர். ஒலிபெருக்கி மூலம் 25 ஏக்கர் முதல் கேட்டு கொண்டு இருந்தனர்.

 

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாப்பிள்ளை தனது சூழ்நிலையை கூறியுள்ளார். அருகில் இருந்த நண்பர்கள் அதனை வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது