2 மாதங்களில் 1486 கிலோ கஞ்சா பறிமுதல்… 358 குற்றவாளிகள் கைது – அமலாக்க பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அதிரடி நடவடிக்கை.!!

தமிழக முழுவதும் கடந்த 2 மாதங்களில் போதை பொருள் குற்றவாளிகள் 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .அதிக போதை ஏற்றும் 1486 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதை  இல்லாத தமிழ்நாடு மாறிட அமலாக்க பிரிவு மற்றும் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு ஏடிஜிபி மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 18 பெண்கள் உட்பட 358 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .1486 கிலோ கஞ்சாவும் 2200 டை டால் மாத்திரைகள் உள்ளடக்கியது அவற்றின் மதிப்பு ரூபாய் ஒரு கோடியே 50 லட்சம் ஆகும். 17 இருசக்கர வாகனங்கள் 6 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜிபான் பி ஸ்வாஷ் (30).பல் ராம் புஜாரி (25} மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சா சிகுமார்(32) ஆகிய மூன்று குற்றவாளிகளிடமிருந்து 101 கிலோ உலர் கஞ்சா மதிப்பு ரூபாய் 10 லட்சம் ஆகும். நான்கு சக்கர வாகனங்கள் 2 பறிமுதல் செய்யப்பட்டுள்ளன . மதுரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் 22 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திண்டுக்கல்லைச் சேர்ந்த மலைச்சாமி க்கு பத்து ஆண்டுகள் ஜெயில்  தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தேனி மற்றும் மதுரையில் ராஜபாண்டி (27) செல்வம் என்கிற செல்வராஜ் (36) சிவப்பிரகாஷ் (27) கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்த மதியழகன் என்பவருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .போதைப் பொருள் வழக்குகளில் தொடர்பு உடைய 17 குற்றவாளிகள் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளனர் என மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது