திமுக – அதிமுக இணைவது தமிழ்நாட்டிற்கு நல்லது” என விசிக சட்டமன்றக் குழு தலைவரும், திண்டிவனம் எம்.எல்.ஏவுமான வன்னி அரசு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயன்றது குறித்த கேள்விக்கு பதில் அளித்த வன்னி அரசு, “திமுக, அதிமுக இணைந்தால் நன்றாக இருக்கும் என்றே நினைத்தேன். திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்ற முன்னெடுப்பு நல்லதுதான். இந்த நேரத்திலாவது முதலமைச்சர் வேட்பாளர் என்ற இடத்துக்கு அவர் பெயர் முன்மொழியப்பட்டதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு அளித்தோம். நாங்கள் இதை செய்யவில்லை என்றால் எங்களால் தான் ஆளுநர் ஆட்சி வந்தது என்ற பேச்சு வந்திருக்கும். தவெகவுக்கு வெறும் ஆதரவு மட்டும் தர வேண்டாம். துணை முதலமைச்சர் பதவி கேளுங்கள் எனக் கூறினோம். திமுக அதிமுக இணைப்புக்கு இதற்கு முன்பே பலமுறை முயற்சி செய்திருக்கிறார்கள். பிஜு பட்நாயக் கூட இதற்கு முயன்றிருக்கிறார் எனச் சொல்கிறார்கள். திமுகவும் அதிமுகவும் வலிமையாக இருப்பது தமிழ்நாட்டுக்கு நல்லது. அந்த அடிப்படையிலும் திமுக அதிமுக இணைப்பை வரவேற்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.






