கோவையில் 1000 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி பறிமுதல் – 2 பேர் கைது..!

கோவை : தமிழ்நாடு குடிமை பொருள் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் உத்தரவின் பேரில் கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி மேற்பார்வையில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீசார் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு- பாலார்பதி சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த 2 இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தலா 40 கிலோ எடை கொண்ட 4 வெள்ளை நிற மூட்டைகள் என மொத்தம் 160 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரு சக்கர வாகனமும் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தி வந்த சரவணகுமார் (23) வீரப்ப கவுண்டனூர் பாலர்பதி கிணத்துக்கடவு , சபாபதி (43) சென்றாயன் பாளையம் கிராமம், கிணத்துக்கடவு, ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணை செய்தபோது சென்றாயன் பாளையம், தாமரைக் குளம் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டின் அருகில் உள்ள மறைவான இடத்தில் அதனை பதுக்கி வைத்து கேரளா மாநிலத்தில் கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக வாக்குமூலம் கொடுத்தனர.இவர்கள் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..