சாமியார் வீட்டில் பதுக்கி வைத்த 4 அடி உயர ஐம்பொன் சிலை பறிமுதல்… கோவை போலீஸ் ஷாக்..!

கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் உக்கடம் அருகே சாமியார் ஒருவரின் வீட்டிலிருந்து ஐம்பொன் சிலையொன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் திடீரென இன்று பிற்பகல் சாமியார் பாஸ்கர சுவாமிகள் வீட்டில் திடீரென சோதனை மேற்கொண்டதில் இந்த சிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டது முருகர் சிலை என்றும் 4 அடி கொண்ட இந்த சிலைக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், காவல்துறையினர் பாஸ்கர சுவாமிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.