பிறந்தநாளில் நடந்த விபரீதம்… இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து- தொழிலாளி கைது..!

கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது 27 வயது மகளுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பினாராம் . அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை குத்தி விட்டு ஓடிவிட்டார் .இது குறித்து கே.ஜி.சாவடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய குனியமுத்தூர் பி..கே புதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவரை கைது செய்தார். இவர் மீது கொலை முயற்சி உட்பட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.