மக்களுடன் முதல்வர் முகாமில் நீலகிரி மாவட்டம் உதகை ஏழு நகர மன்ற வார்டுகள் மக்கள் திரளாக பங்கேற்பு…

நீலகிரி உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் உதகை செரிங் கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஏழு வார்டுகளை சார்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், மக்களுடன் முதல்வர் முகாமினை உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி பார்வையிட்ட ஆய்வு செய்தார், உடன் 32 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஏ செல்வராஜ் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர், தொடர்ந்து 32 வது வார்டு நொண்டி மேடு தலையாட்டும் மந்து, காந்திநகர், ராம்தாஸ் நகர்,ராயல் கேஸ்ட்,பகுதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாமில் கலந்து கொண்டனர், பகுதி நகர மன்ற உறுப்பினர் செல்வராஜ் தங்கள் பகுதி மக்களின் குறைகளான வீட்டுமனை பட்டா, குடிநீர் விநியோகம், பாதாள சாக்கடை,ஆதார், ரேஷன் கார்டு பெயர் மாற்றம், மின்வாரியம் வீட்டுமனை பெயர் மாற்றம் குறித்த பிரச்சினைகள் நகர மன்ற உறுப்பினர் செல்வராஜ் மக்களிடம் கேட்டறிந்து அதற்குரிய அதிகாரிகளிடம் மனுக்கள் ஒப்படைக்கப்பட்டன என்றார், தொடர்ந்து நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் ஏழு நகரமன்ற வார்டுகளை சேர்ந்த மக்கள் திருநாவு கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அதற்குரிய அதிகாரிகள் வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா, வட்டாட்சியர் சரவணகுமார்,தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி, உதகை நகர வருவாய் ஆய்வாளர்,ஆகியோரிடம் ஒப்படைத்தனர், மற்றும் மாவட்ட முதன்மை அலுவலர்கள் அனைத்து நிர்வாகத்தில் இருந்து வந்து கலந்து கொண்டு மக்களின் குறைகளை அணுகி மனுக்களை பெற்றனர் காலை முதல் மாலை வரை திரளான பகுதி மக்கள் மக்களுடன் முதல்வர் முகாமில் பயனடைந்தனர்