ஆந்திர மாநிலம் தீணி கஞ்சா அம்பத்தூர் பகுதியில் விற்பனை செய்த ஆஷி கைது…

அம்பத்தூர் பட்டரவாக்கம் பகுதியில் வெளிமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை குறைந்துள்ள நிலையில் அடியோடு கஞ்சா இல்லாத பகுதியாக மாற்றிட ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் உத்தரவின் பேரில் அம்பத்தூர் அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனி படையினருடன் காலை 7.45 மணி அளவில் பட்டரவாக்கம் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் மாறுவேடத்தில் கண்காணித்துக் கொண்டிருந்த போது ஒரு வாலிபர் வடமாநில இளைஞர்களிடம் இந்த பொருள் எங்கேயும் வாங்கி இருக்க மாட்டீங்க ஆந்திர மாநிலம் தீணி க்கு வாங்கிட்டு வந்திருக்கேன் இதை நீங்கள் சாப்பிட்டீர்களா னால் மூன்று வேளை சாப்பாடு சாப்பிட மாட்டீங்க எனக் கூறிக் கொண்டிருந்தான் அவனை மடக்கி பிடித்த மாறுவேட கதாநாயகி போலீஸ் இன்ஸ்பெக்டர் சி. தனம்மாள் அவனை மடக்கி பிடித்து கைது செய்தார் அவன் வைத்திருந்த பையில் 10 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார் அவனது பெயர் விபரம் வருமாறு எம் எஸ் ஆஷி வயது 42 தகப்பனார் பெயர் சுரேந்திரன் பி கோழிப்போர் விளை முளகு மூடு கல்குளம் கன்னியாகுமரி ஆகும் இவனைப் பிடித்து போலீஸ் பாணியில் விசாரிக்கையில் ஆந்திர மாநிலத்தில் கஞ்சா குறைந்த விலையில் கிடைக்கிறது இதை வாங்கி அம்பத்தூர் அம்பத்தூர் தொழில்பேட்டை பட்டரவாக்கம் கொரட்டூர் பகுதிகளில் வசிக்கும் வட மாநில தொழிலாளர்களிடம் அதிக விலைக்கு விற்பதால் அமோக லாபம் கிடைக்கிறது என்று கூறியுள்ளான் அவனிடத்தில் இருந்து 10 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அம்பத்தூர் நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது குற்றவாளி ஆஷி நீதிமன்ற காவலுக்காக புழல் சிறையில் அடைக்கப்பட்டான்