ஊரார் இடத்தை ஏமாற்றி விற்ற 2 கேடிகளுக்கு தலா 3 வருடம் மூன்று மாதம் ஜெயில் தண்டனை, ரூ 14 ஆயிரம் அபராதம்…

சென்னை ராஜ அண்ணாமலைபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கோபாலன் வயது 72 இவர் ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கரை சந்தித்து கண்ணீர் மல்க புகார் மனுவை கொடுத்துள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது திருமுல்லைவாயிலில் 45 சென்ட் வீட்டு மனைகள் உள்ளது இந்த இடத்தை கேடி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை பொது அதிகாரம் பெற்றிருந்தான் இவனோடு சேர்ந்து திருடி கிருபா என்பவள் கணவன் பெயர் சாமுவேல் போலி டாக்குமெண்ட் மூலம் திருப்பதி கணேசன் சிவக்குமார் மற்றும் கணேஷ்குமாருக்கு விற்று உள்ளனர் இது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் வழக்கை தீர விசாரித்த நடுவர் ஜோசப் ஸ்டாலின் குற்றவாளி கிருபா கணவன் பெயர் சாமுவேல் இரண்டாவது குற்றவாளி நாராயணன் தகப்பனார் பெயர் அனந்த பிள்ளை ஆகியோருக்கு தலா மூன்று வருடம் மூன்று மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ 14 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார் இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த அரசு உதவி வழக்கறிஞர் சரத் பாபு ஆகியோரை பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர் இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது குழுவினருக்கு கமிஷனர் சங்கர் பாராட்டு தெரிவித்தார்.குற்றவியல் நடுவர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் அரசு உதவி வழக்கறிஞர் சரத் பாபு விற்கும் சமூக சேவகர்கள் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினர்