காட்பாடி ரயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல் – 2 பேர் கைது..!

தமிழக ரயில்வே காவல்துறை ஏடிஜிபி வனிதா கடுமையான உத்தரவின் பேரில் ரயில் நிலையங்களில் மற்றும் ஓடும் ரயில்களில் கஞ்சா மற்றும் குட்கா போதைப் பொருட்களை இல்லாத மாநிலமாக மாற்றிட உத்தரவு பிறப்பித்து இருந்தார். போலீஸ் டி ஐ ஜி ராமர் முன்னிலையில் காட்பாடி ரயில் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உதவி ஆய்வாளர் முரளி மனோகர் முதல் நிலை காவலர் சுதர்சன் மற்றும் காவலர்கள் சிலம்பரசன் மற்றும் ரஹீம் ஆகியோர் வெளி மாநிலங்களில் இருந்து எக்ஸ்பிரஸ் ரயிலை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது அப்போது எஸ் 5 கோச்சில் கழிவறை அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவனைப் பிடித்து விசாரிக்கையில் அவனது பெயர் விகாஸ் பாபு {32) தகப்பனார் பெயர் ஓமனா பாபு கேரளா என்றும் அவன் வைத்திருந்த தோளில் மாட்டும் ஹேர் பேக்கில் 5 கிலோ500 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அவனை கைது செய்தனர் .மேலும் அதே பெட்டியில் பயணம் செய்த சீட் நம்பர் 40 யில் பயணம் செய்த ரவி ராஜ்வன்சி (28) தகப்பனார் பெயர் ஜெயராம் ராஜ் வன்சி பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவன் இவன் வைத்திருந்த பேக்கில் 30 கிலோ 500 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தனர். அவனையும் கைது செய்தனர். இருவரிடமும் 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு வேலூரில் உள்ள என் ஐ பி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டனர். குற்றவாளிகளை நேர்மையாக செயல்பட்டு கைது செய்த காட்பாடி ரயில்வே போலீசாரை ஏடிஜிபி வனிதா வெகுவாக பாராட்டினார். ரயில் பயணிகளின் பாதுகாப்பு சம்பந்தமான புகார்களுக்கு 24×7 இருப்பு பாதை காவல் உதவி மைய எண் 1512 மற்றும் வாட்ஸப் நம்பர் 99625 00500 என்ற எண்ணை அவசரத்திற்கு தொடர்பு கொள்ளலாம்