வியாபாரி வீட்டில் கொள்ளை முயற்சி

கோவை ஆர் .எஸ். புரம் ,வின்சென்ட் காலனியை சேர்ந்தவர் ஜமீல் அகமத் .இவரது மகன் ஜமீல் இம்ரான் (வயது 37) டூல்ஸ் -மிஷின் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இவரது வீட்டில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது.இதுகுறித்து ஆர். எஸ் .புரம். போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.