கல்யாண மன்னன் புருஷோத்தமன் வழக்கு: கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

கல்யாண மன்னன் புருஷோத்தமன் வழக்கு: கற்பழிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சடையப்ப கவுண்டர் மகள் எஸ்.குமுதவள்ளி என்பவர் கடந்த 2018 ம் வருடம் வெள்ளலூரை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும் பின்னர் கணவர் மனைவியாக வாழ்ந்து வந்த போது குமுதவள்ளியிடம் பல வந்தம் செய்து உடலுறவு வைத்து கொண்டதாகவும் பின்னர் அவரிடம் நகைகள் பணத்தை வாங்கி கொண்டு கொலை மிரட்டல் விடுத்து துரத்தி விட்டதாகவும் கோவை போத்தனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இந்த வழக்கு புலியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டதையடுத்து அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையிலான போலீசார் புருஷோத்தமனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.அதே சமயத்தில் புருஷோத்தமன் மகள் கீதாஞ்சலியும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். புருஷோத்தமன் 10 ககும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்ததாகவும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும் கல்யாண மன்னன் புருஷோத்தமன் என்று அந்த சமயத்தில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
மூன்று மாதங்களுக்கு பின் ஜாமினில் புருஷோத்தமன் வந்தார்.தொடர்ந்து வழக்கின் குற்றப்பதிரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் படாமல் இருந்தது. பின்னர் கோவை மாவட்ட மகிளா நீதிமண்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து முதற்கட்ட குற்ற விசாரணை நடந்து வந்தது.இந்த வழக்கில் புருஷோத்தமன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எம்.மகேஸ்வரன் ஆஜர் ஆனார்.இந்த வழக்கில் பலவந்தமாக உடலுறவு செய்தற்கோ. இருதார மணம் செய்தற்கோ எந்தவிதமான அடிப்படை முகாந்திரம் இல்லை என புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ஆணைபடி விசாரணை செய்து குற்றம் சாட்டப்பட்ட புஷோதமனை கோவை மகிளா நீதிமன்றம் மேற்படி இரண்டு குற்றசாட்டில் இருந்து விடுவித்து ஆணையிட்டது.இதே போல இந்த வழ க்கில் கைது செய்யப்பட்ட கீதாஞ்சலி உள்ளிட்டோர் மீது போடப்பட்ட வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.புருஷோத்தமன் மீதான பிற குற்ற பிரிவுகளை கீழமை நீதிமன்றத்தில் விசாரிக்க உத்திரவிட்டது. மேலும் வழக்கை விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவரின் பொருட்களை அபகரித்து வழக்கில் கணக்கு காட்டாத காரணத்தினால் அதற்காக வழக்கு போட்டு தற்போது நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லை என உத்தரவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.