ஓட்டலில் வாங்கிய தயிர் சாதத்தில் புழு… உணவு பாதுகாப்பு அதிகாரியிடம் புகார்.!!

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மரிய ரூவீனா . இவர் பாப்பநாயக்கன்பாளையம் , நேதாஜி ரோட்டில் உள்ள செட்டிநாடு ஓட்டலில் மதிய உணவாக தயிர் சாதம்  சுவிகி மூலம் 164 ரூபாய் கொடுத்து வாங்கினார். அந்த தயிர் சாத பாக்கெட்டை பிரித்துப் பார்த்தபோது சாதத்தில் புழு இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்த அவர் சுவிகி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்தத் தொகையை திரும்ப பெற்றுக் கொண்டார். அதே சமயத்தில் உணவில் தரமற்ற வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சுகாதாரமற்ற முறையில் புழு இருக்கும் ஒட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து நிர்வாகத்தை தொடர்பு கொண்டார்.
இதனை அடுத்து வாடிக்கையாளர் வீட்டுக்கு சென்ற ஒட்டல் ஊழியர்கள் புழு அல்ல வெங்காயம் என சமாளித்துவிட்டு தயிர் சாதத்தை திரும்ப கேட்டுள்ளனர். ஆனால் வாடிக்கையாளர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்டு யாருக்கும் இது போன்ற சுகாதாரமற்ற உணவு தரக்கூடாது என்ற நோக்கத்தில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலரிடம் புகார் அளிக்க உள்ளார்..