சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம்

சிறுத்தை தாக்கி தொழிலாளி காயம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்ல காத்து எஸ்டேட் முதல் பிரிவில் நிரந்தர தொழிலாளியாக பணிபுரிந்து வருபவர் சின்னமுருகன் வயது 52 இவர் வழக்கம் போல இன்று பணிக்கு சென்று 44 ஆம் நம்பர் தேயிலைத் தோட்டத்தில் ஹைவாளி இயந்திரத்தின் மூலம் 7 தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தேயிலை செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மதியம் சுமார் 1,3/4 மணியளவில் திடீரென்று தேயிலைச்செடிகளின் உள்ளே இருந்து பாய்ந்து வந்த சிறுத்தை தாக்கியுள்ளது இதை சற்றும் எதிர்பார்க்காத இவர் சத்தம் போட்டு அலறியுள்ளார் உடனே அருகே பணி செய்தவர்களும் ஓடிவந்து சத்தம் போட்டு சிறுத்தையை விரட்டியுள்ளனர் சிறுத்தை தாக்கியதில் இடது கை, முதுகு, மார்பு மற்றும் கால் பகுதிகளில் நகக்கீரல்களால் காயமடைந்தவரை வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மருத்துவமனையில் வனத்துறை சார்பாக ரூபாய் 5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கி சம்பவப்பகுதியில் நடமாடிய சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது