பெண் காவலர் பயிற்சி நிறைவு விழா- கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு..!

காவலர்கள் சட்டத்திற்கு உட்பட்டு கடமை உணர்வோடு மக்கள் பணியாற்ற வேண்டும்.கோவையில் நடந்த பெண் காவலர் பயிற்சி நிறைவு விழாவில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சு.

கோவை தமிழ்நாடு முழுவதும் சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 10 ஆயிரம் ஆண்கள் – பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள 43 பயிற்சி மையங்களில் 7மாத பயிற்சி அளிக்கப்பட்டது.இதன் நிறைவு விழா தமிழ்நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்தது.கோவை போலீஸ் பயிற்சி பள்ளியில் பெண் காவலருக்கான பயிற்சி நடந்தது.இந்த பயிற்சியில் சேலம் .ஈரோடு ,திருப்பூர், தேனி, நீலகிரி, நெல்லை, மாவட்டங்களைச் சேர்ந்த பெண் காவலர்கள் பயிற்சி பெற்றனர்.பயிற்சி நிறைவு விழா நேற்று மாலை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது.விழாவில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.பின்னர் அவர் திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வர் சண்முகம் உறுதி மொழியை வாசித்தார்.காவல் பணியில் சேரும் பெண் காவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:- கோவையில் உள்ள இந்த போலீஸ் பயிற்சி பள்ளிக்கூடம் 1912 -ம்ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.இப்படிப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த பள்ளியில் நீங்கள் பயிற்சி பெற்றிருப்பதுமிகவும் போற்றுதற்குரியது.கடந்த மே மாதம் 14ஆம் தேதி நீங்கள் இப்பள்ளியில் பயிற்சி தொடங்கினீர்கள்.மொத்தம் 184 பேருக்கு இங்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.இவர்களில் 42 பேர் முதல்நிலை பட்டதாரிகள்,74 பேர் இளங்கலை பட்டதாரிகள், 29 பேர்பொறியியல் பட்டதாரிகள்,39 பேர் பிளஸ் 2 தேர்வானவர்கள்என்பதை அறிந்தேன்.முதுநிலை படிப்பு படித்தவர்கள் காவல்துறை பணியில் சேருவது காவல்துறையின் ஈர்ப்பு தன்மையை எடுத்துக் காட்டுகிறது.இது காவல்துறைக்கு பெருமை சேர்க்கிறது. காவல்துறை பணிக்கு வந்துள்ள முதுநிலை பட்டதாரிகள் , இளநிலைபட்டதாரிகள், இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர்கள் தங்கள் அனைத்து திறமைகளையும் காவல்துறைதொழில்நுட்பத்தில் காட்ட வேண்டும்.இன்று உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாகும்.காவல் பணியில் அடி எடுத்து வைக்கும் நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு மக்கள் பணியாளர்களாக செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். சட்ட தேர்வில்முதலிடம் பிடித்த பெண் காவலர் சத்யாவுக்கு தங்கப்பதக்கமும்,சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த சிந்துஜாவுக்கு வெள்ளிப் பதக்கமும் சான்றிதழ் வழங்கப்பட்டது.மூன்றாவது இடம் பிடித்த ஞான சௌந்தர்யாவுக்கு வெண்கலபதக்கமும் சான்றிதழ் வழங்கப்பட்டது.கவாத் தேர்வில் முதலிடம் பெற்ற தேவிக்கு தங்க பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. சங்கீதாவுக்கு வெண்கல பதக்கம்,சான்றிதழ் வழங்கப்பட்டது.துப்பாக்கி சுடும் போட்டியில் காவலர் ராஜலட்சுமிக்கு தங்கப்பதக்கமும் ஓவியாவுக்கு வெள்ளிப் பதக்கமும் சுகப்பிரியாவுக்கு வெண்கல பதக்கமும்வழங்கப்பட்டது.பின்னர் பெண் காவலர்களின் வீரமிகு சிலம்பாட்டமும்,கராத்தே நிகழ்ச்சியும்,வண்ணமிகு அணிவகுப்பும் நடந்தது.பள்ளி முதல்வர் சண்முகம் மற்றும் பயிற்சி அளித்த ஆய்வாளர்கள் , உதவி ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள்,சிலம்புகலை நிபுணர், கராத்தே மாஸ்டர்கள் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியை காண பெண் காவலர்களின் பெற்றோர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர்.அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது.