பைக் மீது லாரி மோதி பெண் போலீஸ் ஏட்டு மகன் பலி.!!

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் தங்கபாலன் இவரது மனைவி விஜயலட்சுமி ( வயது 43) இவர் கோவை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார்.இவர்களது மகன் ராகுல் அசோக் (வயது 19) இவர் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .. கல்லூரிக்கு செல்வதற்காக நேற்று இருகூர் பாலம் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த டிப்பர் லாரி இவரது,பைக் மீது மோதியது .இதில் ராகுல் அசோக் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் விஜயலட்சுமி கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சேலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் முத்து குமார் (வயது 34) என்பவரை கைது செய்தனர் மேலும் விசாரணை நடந்து வருகிறது. லாரி மோதி கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.