கோவை கிணத்துக்கடவு முள்ளுபடி ரயில்வே கேட் அருகே உள்ள கஜேந்திரன் நகரை சேர்ந்தவர் கணேசன் ( வயது 43)நேற்று இவர் தனது மனைவி வேணியுடன் பைக்கில் பொள்ளாச்சி- கோவை ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சென்றாம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர்கள் சென்ற பைக் மீது மோதியது .இதில் கணவர் கணேசன் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கணேசன் இறந்தார் .இது குறித்து இவரது மனைவி வேணி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து அந்த காரை தேடி வருகிறார்.