அப்படிப்போடு!! கோவை மக்களே!! இனி எங்கு சென்றாலும் இலவச wi-fi தான் போங்க … தூள் கிளபுங்க..!!

கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. அலங்கார விளக்குகள் எல்இடி திரை மற்றும் பொழுதுபோக்கு தளங்களும் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகே கோவை மாநகராட்சியுடன் இணைந்து தனியார் பங்களிப்புடன் இலவச வைஃபை இணைய வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக Wi-Fi மரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு ஒரே நேரத்தில் சுமார் 150 பேர் அதிவேக இணைய சேவையை இலவசமாக பயன்படுத்தலாம்.

ஏற்கனவே வஉசி மைதானத்தில் Wi-Fi மரம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகே Wi-Fi மரம் துவங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநகரில் துடியலூர், காந்திபுரம் பேருந்து நிலையம், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த Wi-Fi மரம் அமைக்கப்பட உள்ளதாக தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை தடையின்றி இணைய சேவை வழங்க உள்ளதாகவும் அதிவேக இணையதள பயன்பாட்டை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளனர்.