பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டிகொலை செய்யப்பட்ட வழக்கில் 2 கொலையாளிகள் எங்கே..? போலீசார் தீவிர தேடுதல் வேட்டை.!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 45) பாஜக கிளைத்தலைவர். கடந்து 3-ந் தேதி இரவு அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் குடிபோதையில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மோகன்ராஜ் அவரது அண்ணன் செந்தில்குமார் (வயது 47) அவரது தாயார் புஷ்பவதி (வயது 69) சித்தி ரத்தினம்மாள் (வயது 58 )ஆகியோரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 3பேரில் திருச்சி மணப்பாறையை சேர்ந்தசெல்லமுத்து( வயது 24) மட்டும் போலீசாரிடம் சிக்கினார்அவனை போலீசார் கைது செய்தனர்.அவரை போலீசார் ஆயுதங்களை எடுத்து அழைத்துச் சென்றபோது போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றார் அப்போது தவறி விழுந்துஅவரது காலில் முறிவு ஏற்பட்டது. மேலும் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் ( வயது 27 )தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (வயது 22) ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.கொலைசெய்யப்பட்ட செந்தில்குமாரிடம் வெங்கடேஷ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவரை செந்தில்குமார் வேலையை விட்டு நீக்கினார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் செந்தில் குமாரின் வீட்டுக்கு செல்லும் பாதையில் தனது நண்பர்கள் செல்ல முத்து, சோனை முத்தையா ஆகியோருடன் சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். செந்தில் குமார் இதனால் வாய் தகராறு ஏற்பட்டு செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேரையும் வெங்கடேஷ் தனது நண்பர்கள் செல்லமுத்து |சோனை முத்தையா ஆகியோருடன்சேர்ந்து கொடூரமாகவெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.இந்த நிலையில் கொலையாளிகள் 2 பேரை கைது செய்தால் மட்டுமே கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை பெற்றுக்கொள்வோம் என்று அவரது உறவினர்கள் கிராம மக்கள் பாஜகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் .நேற்று இரண்டாவது நாளாக பல்லடம் அரசு மருத்துவமனையில் மறியல் போராட்டம் செய்தனர். மேலும் 4 பேர் கொலையை கண்டித்து நேற்று பல்லடத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது .இந்த நிலையில் அந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமிநாதன் 1பல்லடம் போலீஸ் சூப்பிரண்டு சௌமியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் .இதில் கொலையாளிகளை பிடித்து விடுவோம் என்று போலீஸ் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் உடல்களைபெற்றுக் கொள்வதாக அறிவித்தனர். நேற்று மாலை 3:30 மணிக்கு பல்லடம்அரசு மருத்துவமனையில் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது இதை தொடர்ந்து உடல்கள் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள் பெண்கள் கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் 2 ஆம்புலன்ஸ்களில் உடல்கள்ஏற்றுப்பட்டு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி மாநில தலைவர்காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் |மாவட்ட பொதுச் செயலாளர் கே சி எம். பி சீனிவாசன் மற்றும் பாஜகவினர், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமாககலந்து கொண்டனர் .இதை ஒட்டி அங்குபலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.