15 நாட்கள் நடந்தது என்ன..? சீக்ரெட் வெளிப்படையாக போட்டு உடைத்த எடப்பாடி.. பேசியது என்ன..?

சென்னை: அதிமுகவில் பொதுக்குழு நடப்பதற்கு முன் ஓ பன்னீர்செல்வமுடம் நடந்த பேச்சுவார்த்தை குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளிப்படையாக பேசினார்.

பொதுக்குழு நடப்பதற்கு முன் நடந்தது என்ன என்று வெளிப்படையாக ஓ பன்னீர்செல்வம் பேசினார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் நேற்று தீர்ப்பு வந்தது. ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது. இந்த பொதுக்குழு முடிவுகள் ரத்து செய்யப்படுகின்றன.

அதிமுகவில் ஜூன் 23ம் தேதி இருந்த நிலையே தொடர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு அதிமுகவில் இனி பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றாக கையெழுத்து போட வேண்டும்.

பொதுக்குழுவில் 5ல் ஒரு பங்கு நபர்கள் கோரிக்கை வைத்தால் அதை ஏற்றுக்கொண்டு ஒரு ஆணையர் மேற்பார்வையில் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது . இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி இன்று பேட்டி அளித்தார்.

எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், மறுபடியும் பொதுக்குழுவை கூட்டுவோம் வாருங்கள். நீதிபதி தன்னுடைய கருத்தை சொல்லி இருக்கிறார். அதை விமர்சிக்க முடியாது. அதில் உள்ளே செல்ல முடியாது. நாங்கள் மேல்முறையீடு செய்துள்ளோம். என் கைகளில் உள்ளது பாருங்கள். இது அதிமுகவின் சட்ட திட்ட விதிகள். இதை உருவாக்கியது எம்ஜிஆர். இதை கட்டிக்காத்தது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இதைத்தான் நாங்கள் பின்பற்றுவோம். இதில் இருக்கும் விதிகள்படிதான் நாங்கள் நடப்போம்.

அதில் இருக்கும் சட்ட விதிகளின்படிதான் நாங்கள் இதுவரை செயல்பட்டு வருகிறோம். ஜூன் 23ம் தேதி பொதுக்குழும் ஜூலை 11ம் தேதி பொதுக்குழு இரண்டும் அதன் அடிப்படையில்தான் நாங்கள் நடந்தோம். இதில் மாற்றம் சொல்ல முடியாது. எங்களை தேர்வு செய்ததே பொதுக்குழு உறுப்பினர்கள்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர்கள் அளிக்காத காரணத்தால் அந்த பதவிகள் காலாவதியாகிவிட்டது.

நாங்கள் வழக்கில் மேல்முறையீடு செய்து இருக்கிறோம். மேல்முறையீட்டில் என்ன தீர்ப்பு கிடைக்கும் என்று பொறுத்திருந்தான் சொல்ல முடியும். நாங்கள் தீர்ப்பை மதிக்கிறோம். நீதிபதி சொன்னதற்கு எதிராக பேச முடியாது. ஓ பன்னீர்செல்வத்திற்கு பதவிக்கு வர வேண்டும். அதற்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார். பதவி வேண்டும் என்றால் ஆட்கள் வேண்டும் என்பார். அவருக்கு பதவி வேண்டும் என்றால் தர்ம யுத்தம் செய்வார்.

அவரிடம் நாங்கள் 15 நாட்கள் பேசினோம். அவரிடம் சமாதானம் பேசினோம். ஆனால் அவர் எதுவும் கேட்கவில்லை. தொண்டர்கள் , நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் அவரிடம் 15 நாட்கள் பேசினார்கள். அது எதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் தன்னை பற்றி மட்டுமே நினைத்தார். கட்சியை பற்றிய நினைக்கவில்லை. மக்கள் ஆதரவு உள்ளவர்களுக்குத்தான் ஆதரவு இருக்கும்.

ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் பொதுக்குழுவிற்கு வாருங்கள். உங்களுக்குத்தான் ஆதரவு இருக்கிறதே. வாருங்கள் வந்து நிரூபியுங்கள். பொதுக்குழுவிற்குத்தான் உச்ச அதிகாரம் உள்ளது. அங்கு வாருங்கள். ஆனால் அவர்தான் அங்கு வரவில்லையே. அதிமுக அலுவலக பூட்டை உடைக்கிறாரே. இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும், என்று எடப்பாடி பழனிசாமி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.