அடுத்த 24 மணி நேரத்தில் கோவை- திருப்பூரில் கனமழை-வானிலை மையம் எச்சரிக்கை..!

கோவை : சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இலங்கைக்கு தென்கிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்து கொண்டு வருகிறது. இது வடக்கு வடமேற்க்காக நகர்ந்து மன்னார் வளைகுடா வருகை தரும். இதன் காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும்.

மிக கன மழை பெய்யும் இடங்கள் :சென்னை ,காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கும்பகோணம், புதுச்சேரி, காரைகால், இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுகல், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் மிக கனமழை பெய்யும்.

மழை பெய்யும் இடங்கள்: இராணிபேட்டை சேலம் திருவண்ணாமலை
அரியலூர் பெரம்பலூர் நாமக்கல் கருர் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் தேனி உடுமலைபேட்டை விழுப்புரம் தென்காசி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.