அனைத்து மொழிகளையும் சமமாக நடத்தும் இந்தியாவைக் காண உறுதியேற்போம்”- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், தாய்மொழி தினத்தை கொண்டாடும் விதமாக தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ” மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு வணக்கங்கள். அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.