16 வயது சிறுமிக்கு நடந்த வினோத கொடுமை குறித்து அதிர்ச்சி வாக்குமூலம் – நியாயம் கிடைக்க அண்ணாமலை வெளியிட்ட தகவல் .!!

தமிழகத்தில் புதுவிதமான ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

16 வயது சிறுமி ஒருவரின் கருமுட்டைகளை திருட்டுத்தனமாக எடுத்து விற்பனை செய்த, சிறுமியின் தாய் இந்திராணி, அவரின் இரண்டாவது கணவர் (கள்ளக்காதலன் என்றும் சொல்லப்படுகிறது) சையது அலி, புரோக்கர் வேலை செய்த மாலதி என்பவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கு சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஒரு கனலோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரின் அந்த பதிவில்,

“16 வயது சிறுமி சித்திரவதை செய்யப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கருவுற்ற பிறகு கருமுட்டைகளை 8 முறை விற்றுக் காசாக்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது;

இதற்குக் காரணமான பின்னிலிருந்து இயக்கி வரும் சதிகார கும்பலைக் கண்டறியவேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் தாயின் இரண்டாம் கணவர், இடைத்தரகர் ஆகியவர்களுக்கு எதிராக போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் பற்றியும் விசாரிக்க வேண்டும்.

இந்த வழக்கை விசாரித்து 16 வயது சிறுமிக்கு நீதி வழங்க மாநில காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரம் வழங்கும் என நம்புகிறோம்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.