பார்வை இழந்த மாற்றுத் திறனாளி மாணவி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு எழுதி 91.40% வெற்றி

பார்வை இழந்த மாற்றுத் திறனாளி மாணவி சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு எழுதி 91.40% வெற்றி

கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஓவியா உதவியாளர் இல்லாமல் மடிக்கணினில் சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வு எழுதி 91.40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளார்

கடலூர் மாவட்டம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் விஜயராஜ் இவரது மனைவி கோகிலா இவர்களது மகள் ஓவியா நான்கு வயதாக இருக்கும் போது அவரது பார்வை திறன் படிப்படியாக குறைந்து விடும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர் ஆறாம் வகுப்பு பயிலும் வரைந்த பார்வை திறனோடு எழுதி வந்த ஓவியா ஏழாம் வகுப்பு பயிலும் போது பார்வை திறனை முற்றிலும் இழந்துள்ளார் இருப்பினும் மனம் தளராத ஓவியாவின் பெற்றோர் தொழில்நுட்ப உதவியுடன் மகளுக்கு கல்வி புகட்டியுள்ளனர்

சென்னையில் கடந்த 2013 ஆண்டு அண்ணா லைப்ரரியில் சங்கர் சுப்பையா என்பவர் மாற்றுத் திறனாளிகளுக்கு பயிற்சி வகுப்புகள் கொடுத்தார் இதனை அடுத்து ஓவியாவிற்கு மூன்று மாதம் கம்ப்யூட்டர் பேசிக் பயிற்சியும் கொடுக்கப்பட்டது

கம்ப்யூட்டரில்

Jop access with speech Software, Non visuval desktop access. Software ஆகிய சாப்ட்வேர்களை வைத்து பயிற்சி கொடுத்தோம்

மடிக்கணினியில் ஸ்கிரீன் ரீடர் மென்பொருள் உதவியுடன் பாட புத்தகத்தில் உள்ளவற்றை ஒளி வடிவில் கேட்டு கற்றுக்கொள்ள பயிற்சி அளிக்க தொடங்கினார் அதோடு வகுப்பில் பாடம் நடத்தும் போது பாட குறிப்புகளை கேட்டு மடிக்கணினியில் குறிப்பெடுக்கவும் கீபோர்டை திறம்பட கையளவும் கற்றுக் கொடுத்தனர் பள்ளி தேர்வுகளின் வினாக்களை படிக்க மட்டும் உதவியாளரை வைத்துக்கொண்டு பதிலை கீபோர்டு உதவியுடன் கணினியில் எழுதி வந்துள்ளார் ஓவியா அதன் பலனாக சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் உதவியாளர் துணை இன்றி தமிழகத்தில் முதன்முறையாக கணினியில் தேர்வு எழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் ஓவியா நேற்று வெளியான சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வில் 500க்கு 457 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார்

இது குறித்து விஜயராஜ் கூறும்போது

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி பப்ளிக் ஸ்கூலில் படித்த கார்த்திக் ஷிகான் என்ற பார்வை திறன் மாற்றுத்திறனாளி மாணவர் கணினி உதவியுடன் சிபிஎஸ்சி தேர்வு எழுதிய அறிந்தோம் அதை பார்த்து ஓவியாவுக்கும் அதேபோல பயிற்சி அளிக்க தொடங்கினோம் நெய்வேலியில் உள்ள பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு வரை ஓவியா பயின்றார் அதன் பிறகு அங்குள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிளஸ் ஒன் வகுப்பில் வணிகவியல் பாடப்பிரிவு இல்லாததால் கோவை கணவாயில் உள்ள யுவ பாரதி பப்ளிக் பள்ளியில் பிளஸ்-1-யில் சேர்ந்தோம் நோய் தொற்று காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் போது ஓவியா சிரமப்பட்டார் ஓவியா அடுத்து பிகாம் சிஏ படிப்பில் ஓவியாவை சேர்க்க முடிவு செய்துள்ளோம் சிவில் சர்வீஸ் தயாராக வேண்டும் என்பதை ஓவியாவின் எண்ணம் என தெரிவித்தார்

மேலும் அவரது தாயார் கூறும்போது பார்வையற்ற மாணவர்கள் சிபிஎஸ்இ தேர்வுகளை கணினி மூலமாக எழுதி கொள்ளலாம் என அரசாணை வெளிட வேண்டும் இதனால் ஏராளமான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவித்தார்