கோவையில் 150 கிலோ குட்கா பறிமுதல்- வியாபாரிகள் இருவர் கைது..!

பொள்ளாச்சி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி நேற்று அங்குள்ள குளத்தூர் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது மொபட்டில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 49 கிலோ தடை செய்யப்பட்டு குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பொள்ளாச்சி அம்பராம்பாளையம், விநாயகர் கோவில் வீதியைச் சேர்ந்த சக்திவேல் குமார் (வயது 37) என்பது தெரியவந்தது. குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .அவரிடம் மேலும் விசாரணை நடந்து வருகிறது.

இதே போல பேரூர் பக்கம் உள்ள தீத்திபாளையம் பள்ளிக்கூடம் வெளியே சேர்ந்தவர் பீமா வயது 51 இவரும் மளிகை கடை நடத்தி வருகிறார் இவரது மளிகை கடையில் பேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரம் நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட குட்கா 101 கிலோ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வியாபாரி பீமா கைது செய்யப்பட்டார்.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.